Tamil News Paper

Switch to desktop Register Login

Tamil News Paper

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை அனுபவிக்க பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகிறது. கோடை சீசனை முன்னிட்டு கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியும், கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சியும், ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும் நடைபெற்றது. கோடை விழாவின் கடைசி நிகழ்ச்சியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 55வது பழக்கண்காட்சி தொடங்குகிறது. விழாவுக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் தலைமை தாங்கி, கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். பழக்கண்காட்சியை முன்னிட்டு பூங்காவில் பல்வேறு வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன. அவைகள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன. பழக்கண்காட்சியில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள தோட்டக்கலைதுறை சார்பில் அரங்குகள் வைக்கப்படுகிறது. மேலும் தனியார் அரங்குகளும் இடம் பெறுகிறது. கண்காட்சியில் சிறப்பு அம்சமாக 24 அடி உயரம், 34 அடி அகலம் கொண்டு 3 ஆயிரத்து 500 கிலோ எடை உள்ள பழங்களை கொண்டு ராட்சத வண்ணத்து பூச்சி உருவம் அமைக்கப்படுகிறது. மேலும், நீலகிரி மலை மாவட்ட பழங்களான துரியன், மங்குஸ்தான், பீச்சீஸ், பிளம்ஸ், ஊட்டி ஆப்பிள், பேரி போன்ற பழங்களும் இடம் பெறுகிறது. பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பழங்களின் பெயர்களை தெரிந்து கொள்வதற்காக அந்தந்த பழங்களின் பெயர்களை ஒட்டப்பட்டுள்ளன.

 

 

மேலும்... 0

மணிரத்னம் தயாரிப்பில் நடித்த கடல் பட நாயகன் கௌதம் தன் முதல் படத்தில் நன்றாக நடிப்பை வெளிப்படித்திருந்தாலும். கடல் படத்தின் வசூல் சுமாராக தான் இருந்தது. இதனால் மணிரத்தினத்தின் நடிப்பில் நடித்த பின் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்ப்பார்த்திருந்த கடல் கௌதமுக்கு எந்த வித முன்னேற்றமும் இல்லை. கடல் படத்திற்கு பின் கௌதமை வைத்து நடிக்க கேட்டுக்கொண்ட இயக்குனர்கள் படத்தின் போதிய வரவேற்பு இல்லாததால் விலகிக்கொண்டனர். இதனால் ஏமாற்றமடைந்த தன் மகனை நடிப்பில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும் என நடிகர் கார்த்திக் தன் மகனை தேற்றினார்.  பின்னர் தன் மகனுக்காக சில இயக்குனர்களை சந்தித்து பேசி வந்தார். அவரது முயற்சியின் பலனாக இப்போது 3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் கை ராஜா வை படத்திற்கு கமிட்டான கெளதம், இப்போது தெலுங்கில் வெளியான அலமொடலய்ண்டி என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார். மேலும் கமர்சியல் காதல் கதையான இப்படத்தில் கெளதமுக்கு ஜோடியாக புத்தகம் படத்தில் நடித்த ரகுல் பரீத் சிங் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களாகவே படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படத்துக்காக தனது பழைய கெட்டப்பை மாற்றி தன்னை புதிய பாணிக்கு மெருகேற்றிக்கொண்டுள்ளார் நடிகர் கடல் கெளதம். 

மேலும்... 0

கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஜதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் ‘பிளே – ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. இவற்றில் முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்சை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. பின்னர் நடைப்பெற்ற வெளியேற்றுதல் சுற்றுப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜதராபாத்தை தோற்கடித்தது அந்த அணியை போட்டியை விட்டு வெளியேற்றியது. இந்நிலையில் இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று போட்டிக்கான ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றிப்பெறும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும்.    

மேலும்... 0

கேன்ஸ்66வது திரைப்பட விழாவில், இந்தியாவின் சார்பில் சிறப்பு அழைப்பாளராக ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டுள்ளார். மேலும் தனது ஒன்றரை வயது மகள் ஆராத்யாவுடன், ஐஸ்வர்யா ராய் இந்நிகழ்ச்சியில்கலந்து கொண்டார். இரண்டாவது முறையாக இத்திரைப்பட விழாவிற்கு வரும் ஆராத்யா, சென்ற முறை தன் தாயுடன் இங்கு வந்தபோது ஐந்து மாதக் குழந்தையாக இருந்தார். தனது பேட்டிகளுடனும், திரைப்பட விழா சிறப்பு நிகச்சிகளுடனும், மும்முரமாக இருக்கும் ஐஸ்வர்யா, தன்னுடைய மகளையும் கவனித்துக் கொள்ளத் தவறுவதில்லை. இந்திய சினிமாவின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தில், தன்னுடைய மேற்கத்திய உடை பாணியைப் பின்பற்றாமல், கருப்பு நிறப் புடவையில் வந்து அனைவரையும் அவர் கவர்ந்தார்.சிவப்புக் கம்பள நிகழ்ச்சிகளிலும், தன்னுடைய அழகிய உடை அலங்காரங்களிலும், நளினமான நடை பாவனைகளிலும், பலரது மனதையும் கொள்ளை கொண்ட ஐஸ்வர்யா தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகளாக இவ்விழாவில் பங்கு பெறுகிறார் என்பது மகிழ்ச்சியே. விழாவில் ஐஸ்வர்யாராய்க்கு கொடுக்கும் வரவேற்புகளை அவரது மகள் ஆராத்யாவுக்கும் விழாக்குழுவினர் சிறப்பாக கொடுத்தனர். விழாக்குழுவினர் உள்ளிட்ட அனைவரையும் குட்டி ஐஸ்வர்யா வெகுவாக கவர்ந்திளுத்தார்

மேலும்... 0

டெல்லியில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தன. முதலில் களம் இறங்கிய ஹைதராபாத் அணியில் துவக்க வீரர் படேல் 1 ரன் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த விஹாரி 1 ரன் எடுத்தும் ஆட்டம் இழந்தார். இதை அடுத்து நிதானமாக ஆடத் தொடங்கிய தவான், வைட் ஜோடி ஓரளவு ரன் சேர்த்தது. தவான் 39 பந்துகளில் 33 ரன்னும், வைட் 28 பந்துகளில் 31 ரன்னும் எடுத்தனர். சமி 21 பந்துகளில் 29 ரன்னும் பெரேரா தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியுடன் 6 பந்துகளில் 11 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். சமண்ட்ரய் 14 ரன் எடுத்தார். மேலும் 20 ஓவர் இறுதியில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து,  இதை அடுத்து 133 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துவக்கத்தில் திராவிட் 12, ரஹானே 18, வாட்ஸன் 24 என ரன் எடுத்து ஆட்டம் இழக்க, பின்னர் வந்த யோக்னிக் ரன் ஏதும் எடுக்காமலும் பின்னி 2 ரன்னிலும் ஆட்டம் இழக்க, ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி எழுந்தது. அடுத்து வந்த சாம்ஸனும் 10 ரன்னில் ஆட்டம் இழக்க, ஹோட்ஜ், பால்க்னர் இருவரும் அசராமல் அடித்தனர். ஹோட்ஸ் மிக அபாரமாக விளையாடி 29 பந்தில் 5 சிக்ஸர் 2 பவுண்டரிகளுடன் 54 ரன் எடுத்தார். பால்க்னர் 11 பந்தில் 11 ரன் எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்ட நிலையில், தொடர்ந்து 2 சிக்ஸர் அடித்து அசத்தினார் ஹோட்ஜ். இறுதியில் 19.2 ஓவர் முடிவில் ராஜஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கண்டது.

 

 

மேலும்... 0

இந்திய கடலோர காவல் படையில் 28 ஆண்டுகள் பணியாற்றிய வீரா கப்பலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவற்றிற்கு பதிலாக, அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய  ‘வைபவ்என்ற புதிய கப்பல் இணைக்கப்பட்டது. கடலோர காவல்படை வைஸ் அட்மிரல் அனுராக் ஜி. டப்ளியல் தலைமை வகித்தார். நெல்லை டிஐஜி சுமித்சரண், கலெக்டர் ஆசிஷ்குமார், கடலோர காவல்படை ஐஜி சர்மா, ‘வைபவ்கப்பலின் பொறுப்பு அதிகாரியான டிஐஜி சஞ்சீவ் ட்ரிகா, தூத்துக்குடி கமாண்டன்ட் ஆனந்த குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.வைஸ் அட்மிரல் அனுராக் ஜி. டப்ளியல் புதிய கப்பலை கடலோர காவல் படையுடன் முறைப்படி இணைத்து வைத்தார்கள்.இதையடுத்து, கப்பலில் இந்திய தேசியக் கொடி, கடலோர காவல் படை கொடி மற்றும் அனைத்து நாடுகளின் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டது. இதற்கு பின் அனுராக் ஜி.டப்ளியல் பேசியபோது: இந்த கப்பல் 94 மீட்டர் நீளம், 1940 டன் எடையுள்ளதுமணிக்கு 26 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது. தொடர்ந்து 15 நாள் கடலில் பயணம் செய்யும் திறனுடையது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. இதன் மேல்தளத்தில் ஒரே நேரத்தில் இரு ஹெலிகாப்டர்களை நிறுத்த சிறப்பு ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 5 அதிவேக ரோந்துப் படகுகள் உள்ளன. இதுதவிர, கடலில் இருக்கும் சிறு சிறு மாசுகளை கட்டுப்படுத்தும் வகையில் இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 91 சிஆர்என் (குளோஸ் ரேஞ்ச் நேவல் கன்ஸ்) துப்பாக்கிகளும் இக்கப்பலில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும்... 0

பொது துறை வங்கிகள் மற்றும் தனியார் துறை வங்கிகள் தங்கள் ஆண்டு வருமானத்தை காட்டுவது வழக்கம். இதன்படி சிட்டி யூனியன் வங்கியின் ஆண்டு இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி என்.காமகோடி அதை வெளியிட்டுள்ளார்.  சிட்டி யூனியன் வங்கியின் விவரம் தெரிவிக்கையில்: வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.35,648 கோடியாகவும், நிகர மதிப்பு ரூ.1631 கோடியாகவும்,நிகல லாபம் ரூ.322 கோடியாகவும் உயர்ந்துள்ளது. வங்கியின் வைப்புத் தொகை ரூ.20,305 கோடியாகவும், கடன்கள் ரூ.15,343 கோடியாகவும், மொத்த வருமானம் ரூ.2,462.39 கோடியாகவும், இதர வருமானம் ரூ.273.64 கோடியாகவும் உள்ளது. வங்கியின் மொத்த வராக்கடன் 1.13 சதவீதமாகவும், நகர வராக்கடன் 0.63 சதவீதமாகவும் உள்ளதாக தகவல் தெரிவித்தார்.

மேலும்... 0

பாடகர் ஹரிஹரனுக்கு தேசிய விருதான லதாமங்கேஷ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்ரோஜா,பம்பாய்,ஜீன்ஸ்,இந்தியன்,சிவாஜி,குரு, காசி, உள்பட பல தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் பாடல்கள் பாடி வெற்றி கொடுத்தவர். இவருக்கு லதாமங்கேஷ்கர் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. மேலும் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த விழாவில் பின்னணி பாடகர் ஹரிஹரன் கலந்து கொண்டு விருதினையும், ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசையும் பெற்றுக்கொண்டார். இவ்விருதைனை மாநில அமைச்சர்கள் கைலாஷ் விஜய்வராகியா,லட்சுமிகாந்த் சர்மா ஆகியோர் வழங்கி கௌரவித்தனர். இதே போல் மலையாளம், கன்னடம்,மராத்தி,போஜ்புரி,தெலுங்கு,ஆகிய மொழி திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ள ஹரிஹரன் ஏற்கனவே கடந்த 2004-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் என்பது கூடுதலான தகவலாகும்.

மேலும்... 0

டெல்லியில் நேற்று நடந்த கிரிகெட் போட்டியில், டாசில் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்தது.மும்பை அணியுடனான பிளே ஆப் சுற்று ஆட்டத்தில், 48 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சென்னை அணி பைனலுக்குள்நுழைந்தது. ஹஸி, விஜய் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவரில் 52 ரன் சேர்த்தனர். விஜய் 23 ரன் எடுத்தார். அடுத்து ஹஸியுடன் ரெய்னா ஜோடி சேர்ந்தார். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு இறுதி வரை ஆட்டமிழக்காமல் 140 ரன் சேர்த்தது. சென்னை 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 192 ரன் குவித்தது. ஹஸி 86 ரன் (58 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), ரெய்னா 82 ரன் (42 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்திருந்தனர்.  அடுத்து களமிறங்கிய மும்பை அணி193 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன்  ஆட தொடங்கியது. ஆனால் 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 144 ரன் மட்டுமே  எடுத்து தோற்றுப்போயின. ஸ்மித் 68, போலார்டு 24 ரன்கள் எடுக்க கேப்டன் ரோகித் சர்மா உட்பட அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார்கள். மேலும் மும்பை அணி தோல்வியை சந்தித்த போதிலும் குவாலிபயர் 2-வது சுற்றில் விளையாடும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

மேலும்... 0

பெல்ஜியம் நாட்டில் ஒரு வயதாகும் புறா வளர்க்கப்பட்டது. இந்த புறா போல்ட் என்னும் பெயர் கொண்டவையாகும். இவை மின்னல் வேகத்தில் பறந்து உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.அந்த ஆண் புறாவை ஒரு சீன தொழிலதிபருக்கு நான்கு லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் போட்டிகளில் பறக்கும் வேகமான பறவைகள் ஏலம் விடப்பட்ட போதே இந்தப் புறாவை அந்த சீன தொழிலதிபர் வாங்கியுள்ளார். இந்த ஏலத்தில் பெரும்பாலான பறவைகளை சீனா மற்றும் தாய்வான் நாட்டிலிருந்தவர்களே வாங்கியுள்ளாகள். இந்தப் புறாவை வளர்த்த லியோ ஹெரிமன்ஸ் பெல்ஜியப் புறாக்களை தற்போது நடைபெற்ற ஏலத்தில் அவர் தன்னிடம் இருந்த மொத்த பறவைகளையும் ஐம்பது லட்சம் டாலர்களுக்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்துள்ளார். இந்த புறாக்களை விலை கொடுத்து வாங்கும் போட்டியாளர் தெரிவிக்கையில்: இந்த அளவுக்கு பணம் கொடுத்து ஒரு புறாவை வாங்குவது விலை மதிப்பிலாத ஒரு கலைப் பொருளை வாங்குவது போல என்று தெரிவித்தார். மேலும் பெயர் தெரியாத ஒருவரின் ஓவியத்தைவிட பிக்காஸோவின் ஒரு ஓவியம் பல மடங்கு மதிப்பு வாய்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டி விளக்கமளித்தார்.

மேலும்... 0

External links are provided for reference purposes. Tamilpaper.com is not responsible for the content of external Internet sites.

Top Desktop version